முட்புதருக்குள் நாசம் செய்து வீசப்பட்ட 4 வயது சிறுமி.. திருவள்ளூரில் அதிர்ச்சி!


காணாமல் போன 4 வயசு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்ட கொடூரம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் அமீத். இவர் அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது பூர்வீகம் ஒடிசா என்று கூறப்படுகிறது. வேலைநிமித்தமாக இங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

இவரது 4 வயசு பெண் குழந்தை ஹாசினி மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்தில் குழந்தை மாயமானது. இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் குழந்தையை தேடி அலைந்தனர். கடைசியில் போலீசிலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி இறந்து நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைக்கு உடலெங்கும் காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக போலீசுக்கு சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை கையில் எடுத்து உள்ளனர். மிராசு வயது 25, சந்திரபானு வயசு 60, இவர்கள் 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

இருவருமே அமீத்துடன் வேலை பார்ப்பவர்கள், ஒடிசாவை சேர்ந்தவர்கள், அதே பகுதியில் வசித்தும் வருபவர்கள். விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகுதான் முழு விவரமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாநில தம்பதியின் 4 வயசு குழந்தை நாசமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி நிறைந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!