குளிரில் வெளியே நிற்க வேண்டாம்… வீட்டுக்குப் போங்கள் – சிறுமிகளை நெகிழ வைத்த இளைஞர்..!


தமிழ் திரைப்படங்களில் வழக்கமான காட்சி ஒன்று உண்டு. சாலையோரம் பூ விற்கும் பாட்டி, பென்சில் பேனா விற்கும் சிறுவன் போன்ற எளிய மனிதர்களிடம் ஹீரோ அல்லது ஹீரோயின் மொத்த பொருள்களையும் வாங்கி அதற்கான பணத்தை கொடுத்து அவர்களின் அன்றைய பணத்தேவையை பூர்த்தி செய்வார்கள். இதுபோன்று நிஜத்தில் ஒரு இளைஞர் செய்திருக்கிறார்.

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் தற்போது கடும் குளிர் நிலவுகிறதாம். கடும் குளிரில் சாலையோரம் பிஸ்கட் விற்றுக் கொண்டிருந்த சிறுமிகளைப் பார்த்த இளைஞர் மனமிறங்கி 7 பிஸ்கட் பாக்கெட்டுகளை 40 டாலர் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அந்த இளைஞர் அந்தச் சிறுமிகளிடம் இருந்த மொத்த பிஸ்கட்டுகளையும் வாங்கிக் கொண்டு அதற்கான 500 டாலர்களைக் கொடுத்துள்ளார்.

அந்தச் சிறுமிகளுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ‘நீங்கள் விற்பனை செய்தது போதும். குளிரில் வெளியே நிற்க வேண்டாம். இங்கிருந்து வீட்டுக்குப் போங்கள்’ என்று அக்கறையுடன் கூறியுள்ளார். இந்தக் காட்சியை அங்கிருந்த நபர் புகைப்படத்துடன் முகநூலில் பதிவிட்டார். சிறிது நேரத்தில் உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது. அந்த இளைஞருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. வாழ்த்துகள் ப்ரோ.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!