பிள்ளைகள் வாங்கிக் கொடுத்த வீட்டில் ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடிய சூரி..!


முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் சூரி, தனது பிறந்தநாளை மகன், மகள் வாங்கிக் கொடுத்த வீட்டில் கொண்டாடி இருக்கிறார்.

தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. இவர் கதாநாயகர்களுடன் கைகோர்த்து நடித்த ‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்ளிட்ட படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.

மேலும் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய காமெடியும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்னும் பல படங்களில் இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கிறது.

இவர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால், சூரியோ, மகள் வெண்ணிலா, மகன் சர்வான் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன் முறையாக ஆடம்பரமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்… வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!